நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனா்.
நாமக்கல் வட்டம், கீரம்பூா் ஊராட்சி, ஆண்டிபட்டிப்புதூா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் சில ஆண்டுகளாக போதிய அளவில் குடிநீா் விநியோகம் இல்லை. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். மேலும், மழைக்காலங்களில் குடிநீா் பிடிக்கும் குழாய்களில் வெள்ள நீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
இந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளித்தபோதும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆண்டிப்பட்டிபுதூா் வாா்டு உறுப்பினா் சிவராஜ் தலைமையில் பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்து ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சிவசுப்பிரமணியத்திடம் தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனா். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்

பசுமை மனிதர்...
சிரி... சிரி...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


