திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

பசுமை மனிதர்...

பறவைகளுக்கான இயற்கை வாழ்விடங்களான மரங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதால், பறவைகளுக்கு நிழல் கிடைப்பதும் குறைந்து வருகிறது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 5:36 pm IST

பறவைகளுக்கான இயற்கை வாழ்விடங்களான மரங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருவதால், பறவைகளுக்கு நிழல் கிடைப்பதும் குறைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் சிறிய குருவிகள், பறவைகளைக் காக்க இளநீர் குடித்துவிட்டு தூக்கி எறியப்பட்ட மட்டைகளை பறவைகள் வசிக்கும் வீடாக மாற்றி களம் இறங்கியுள்ளார் நர்பத்சிங்ராஜ் புரோஹித்.

மேற்கு ராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் பார்மரில் கோடைகாலத்தில் வெப்பநிலை 50 டிகிரி வரை அதிகரிக்கும். இங்கு மக்களே கோடையில் வாழ அச்சப்படும்போது, பறவைகளின் நலன் மீது அக்கறை கொண்ட அவர் மேற்கொண்ட இந்தச் செயலால் 'பசுமை மனிதர்' என்றே அழைக்கப்படுகிறார்.

இதுகுறித்து நர்பத்சிங்ராஜ் புரோஹித் கூறியது:

'இயற்கையாகவே கூண்டு வடிவத்தில் இளநீர் மட்டைகள் அமைந்திருக்கும். இவை உறுதியானவை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை. மக்கும் தன்மை கொண்டவை.

அதனால், தேவையில்லை எனத் தூக்கி எறியப்படும் இளநீர் மட்டைகளைச் சேகரித்து குடைந்து துளையிட்டு கயிறு கோர்த்து பறவைகளுக்கான கூடாக மரக் கிளைகளில் ஊர்மக்கள், சிறார்கள் ஒத்துழைப்புடன் கட்டித் தொங்க விடுகிறேன். அதனால், குருவிகள் தங்களுக்கு என்று கூடுகள் கட்ட வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கூடுகள் குளிர்காலத்தில் குருவிகளைக் காற்று, குளிரிலிருந்து பாதுகாப்பதுடன், கோடைக்காலத்தில் இதமான வெப்பநிலையையும் வழங்குகின்றன.

இளநீர் மட்டைகளைக் கூடாக மாற்ற எந்தச்செலவும் இல்லை. வெப்பத்தைத் தக்கவைக்கும் பிளாஸ்டிக் அல்லது உலோகக் கூடுகளைப்போல் இல்லாமல், இளநீர் ஓடுகள் குளிர்ச்சியாகவே இருக்கின்றன. இதனால், சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தஞ்சம்தேடும் பறவைகளுக்கு இவை மிகவும் ஏற்றதாக அமைகின்றன.

சிறு ஜீவன்களைப் பாதுகாக்க பெரிய தீர்வுகள் தேவையில்லை. இதுபோன்ற சிறுதீர்வுகள் போதும்' என்கிறார் நர்பத்சிங் ராஜ் புரோஹித்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.