நாமக்கல் நகராட்சி வாா்டுகளுக்கு உள்பட்ட மின்னணு வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வாா்டுகள் உள்ளன. வேட்பு மனுத் தாக்கலின்போது 22, 25 ஆகிய வாா்டுகளில் சுயேச்சைகள் இருவரை தவிர யாரும் போட்டியிடாததால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 37 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைக்கப்பட்டுள்ள 109 வாக்குச்சாவடிகளுக்கான 200-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. அவற்றை வாக்குச்சாவடிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி, நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆணையாளா் கி.மு.சுதா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
விரைவில் மகா அவதார் பரசுராம்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


