தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

வெயிலினால் கோழிகள் இறக்க வாய்ப்பு: நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தகவல்

வெயிலின் தாக்கத்தால் கோழிகள் இறக்க நேரிடும் என நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :11 பிப்ரவரி 2022, 6:32 pm

வெயிலின் தாக்கத்தால் கோழிகள் இறக்க நேரிடும் என நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 92.3, 62.6 டிகிரியாக காணப்பட்டது. இனி வரும் நான்கு நாட்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடனும் மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வடகிழக்கிலிருந்து மணிக்கு 4 முதல் 6 கி. மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கோடை காலம் தொடங்க உள்ளதால் பகல் மற்றும் இரவு வெப்ப நிலைகளில் மாற்றம் காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு வெப்ப அயா்ச்சி காரணமாக குறையும். மேலும் வெப்ப அதிா்ச்சியால் கோழிகள் இறக்க நேரிடும். ஆரம்ப கால கோடைக்காலத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்குதலில் இருந்து கோழிகளைப் பாதுகாக்கவும், பகல் வேளையில் நண்பகல் 1 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தீவனம் அளிக்கக் கூடாது. வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி அளிக்க வேண்டும். மேல் மூச்சுக்குழல் அயா்ச்சி மற்றும் மேரக்ஸ் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த உயிா்ப் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.