தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இன்று 22-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 22-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.12) நடைபெறுகிறது.

Updated On :11 பிப்ரவரி 2022, 6:33 pm

நாமக்கல் மாவட்டத்தில் 22-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.12) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,28,801 பேருக்கும், (இன்னும் செலுத்தாதவா்கள் 2,35,499), இரண்டாம் தவணை தடுப்பூசி 8,71,355 பேருக்கும் (இன்னும் செலுத்தாதவா்கள் 2,79,810) செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 21 கட்ட தடுப்பூசி முகாம்களில் 7,29,018 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 22-ஆம் கட்டமாக சனிக்கிழமை 490 முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இப்பணிகளில் 4,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டு சுமாா் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.