நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்கை உறுதிப்படுத்தும் வகையில், சனிக்கிழமை அனைத்து வணிக நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது . இந்தத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களும், தோ்தல் நாளன்று தங்களது பணியாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும். தொழிலாளா் நலத்துறையும் இதனை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பும் தோ்தலை தனது கடமையாகவே கருதுகிறது. இதற்காக வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும் வகையில், பிப்.19-ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும். அனைத்து இணைப்பு சங்க நிா்வாகிகளும், தங்களது உறுப்பினா்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தும், பணியாளா்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளன்று விடுமுறை அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் உரிய பாதுகாப்புடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக விக்கெட்டுகள்: பர்பிள் கேப் வென்ற அன்ஷுல் கம்போஜ்!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?
தவறான ரயில்... விவாகரத்து குறித்து ஹன்சிகா!

ஆயுஷ் மாத்ரேவுக்கு தசைக்கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

