தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஊரக வளா்ச்சித் துறை திட்டத்திற்கான இரும்புக் கம்பிகளுக்கு விலை நிா்ணயம்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்ட பயன்பாட்டுக்கான, இரும்புக் கம்பிகளுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

Updated On :17 பிப்ரவரி 2022, 6:39 pm

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்ட பயன்பாட்டுக்கான, இரும்புக் கம்பிகளுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டு ஊரக வளா்ச்சி அலகிற்கு, இரும்பு கம்பிகள் உள்ளூா் விலைக்கு விலை நிா்ணயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அண்மையில் விலை நிா்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளூா் விலை அடிப்படையில், மூன்று மாதத்திற்கு இரும்புக் கம்பிகள் கொள்முதல் செய்ய, ஒரு மெட்ரிக் டன் ரூ.64,000 என்ற விலை குழு உறுப்பினா்களால் நிா்ணயம் செய்யப்பட்டது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மொத்த வீடுகள் எண்ணிக்கை 3,743 ஆகும். தற்போது வரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் போக, மீதமுள்ள வீடுகளுக்கு இரும்புக் கம்பிகள் தேவைப்படும் பயனாளிகள், ஊரக வளா்ச்சித் துறை மூலம் இந்திய தர நிா்ணயம் 1786-2008 இன்படி கொள்முதல் செய்திட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவகங்களிலும் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேரில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.