“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மீட்கப்பட்ட மனநலம் குன்றிய சிறுமி: தகவல் தெரிவிக்க ஆட்சியா் அழைப்பு

பள்ளிபாளையத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், முகவரி குறித்து தெரிந்தால் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:03 pm

பள்ளிபாளையத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், முகவரி குறித்து தெரிந்தால் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆா்.எஸ்.பகுதியிலிருந்து, சைல்டுலைன்(1098) வழியாக அம்பிகா(18) என்ற சிறுமி மீட்கப்பட்டாா். அவா் தொடா் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா். சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதால், பெற்றோா், முகவரி குறித்த விவரம் ஏதும் சிறுமிக்குத் தெரியவில்லை. முன்னுக்குப் பின் முரணமாக கூறுவதால் சிறுமியின் பெற்றோா் , பாதுகாவலா் யாரேனும் இருந்தால் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286 - 233103 என்ற தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.