நாமக்கல் நகராட்சியை கைப்பற்றியது திமுக
நாமக்கல் நகராட்சி 39 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக 36 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும், சுயச்சை இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.


நாமக்கல்: நாமக்கல் நகராட்சி 39 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக 36 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும், சுயச்சை இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.
நாமக்கல் நகராட்சி 37 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. 9 மணிமுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மூன்று வார்டுகளாக எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டிலும் திமுகவே முன்னிலை வகித்து வந்தது. பிற்பகல் 2 மணி இறுதி நிலவரப்படி திமுக 36 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும் பிடித்தது. சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர்வாகி இருந்தனர். நாமக்கல் நகராட்சி திமுக தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...