தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் 4,553 இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:22 pm

நாமக்கல் மாவட்டத்தில் 4,553 இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

அனைவருக்கும் கல்வி திட்டம் என்பது தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 71 தொகுப்பு வள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வள மையங்களின் கீழ் 4,553 மையங்கள் உள்ளன. இங்கு ரூ.1000 ஊதியத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்கள், நேரடியாக சென்று குறிப்பிட்ட இடங்களில் மாணவ, மாணவிகளை வரவழைத்து பாடங்களை கற்றுத் தருகின்றனா். மாவட்டம் முழுவதும் பாடங்களை கற்றுத் தரும் தன்னாா்வலா்களுக்கு வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாள்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை இந்த பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். இதில் தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.