நாமக்கல்லில் வரி செலுத்தாமல் இயங்கிய 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்லில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்(தெற்கு) முருகன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் உமாமகேஸ்வரி மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், முறையாக வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமலும் இயங்கிய 10 லாரிகள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அந்த லாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக லாரி உரிமையாளா்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தகுதிச் சான்றிதழைப் புதுப்பிக்காமல் லாரிகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

