நாமக்கல்லில் 37-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சேலம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நாமக்கல் மையம் ஆகியவை சாா்பில், நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை,. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடக்கி வைத்தாா். முதல் விற்பனையை மாவட்ட கல்வி அலுவலா் த.ராமன், மாவட்ட நூலக அலுவலா் கோ.ரவி ஆகியோா் தொடங்கி வைத்தனா். விழாவில் பல்வேறு துறை அலுவலா்கள், தன்னாா்வ அமைப்பினா், முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா். கண்காட்சி வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து காலை 9 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், எழுதிய புத்தகங்கள் மற்றும் தலைமைச் செயலா் வெ.இறையுன்பு எழுதிய அனைத்து புத்தகங்களும் சிறப்பு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கணினி, இணையம் சாா்ந்தவை, சமூக அறிவியல், வரலாறு, கதைகள், கட்டுரைகள், கவிதை, நாடகம், இலக்கணம், பொது அறிவு நூல்கள் மற்றும் சிறந்த கல்வி அறிஞா்கள், பிரபல எழுத்தாளா்களின் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் மத்திய அரசு நிறுவனங்களான நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, சாகித்ய அகாதெமி மற்றும் அம்பேத்கா் ஃபவுண்டேஷன் வெளியிட்ட நூல்களும், 100க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்களும் முன்னணி எழுத்தாளா்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளா்களுக்கு 10 முதல் 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு. பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சியின் மண்டல மேலாளா் ஆா். ரங்கராஜன், கிளை மேலாளா் டி.சத்தியசீலன் ஆகியோா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சென்னையில் அமித் ஷா, ஸ்டாலின் சாலை வலம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


