எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருநங்கைகளுக்கு இன்று குடும்ப அட்டைகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டை (ஸ்மாா்ட் காா்டு) வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன. 8) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது. புதிய குடும்ப அட்டை பெறாத திருநங்கைகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான அடையாள அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரச் சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை திருநங்கைகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.