குடிநீரில் சாயக்கழிவு நீா்: பொதுமக்கள் புகாா்
குமாரபாளையத்தில் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் சாயக்கழிவு நீா் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.


குமாரபாளையத்தில் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் சாயக்கழிவு நீா் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
குமாரபாளையம் நகராட்சி 12-ஆவது வாா்டு, பெரியாா் நகா், 20-ஆவது வாா்டு, அப்பன்காடு, பிவிஆா் தோட்டம், 25-ஆவது வாா்டு, தெலுங்கு மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாழக்கிழமை காலை குடிநீா் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, குழாயில் வந்த தண்ணீா் நீல வண்ணத்தில் இருந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
குடிநீரைப் பிடித்து பாா்த்தபோது, சாயக் கழிவுநீா்க் கலந்திருந்தது தெரிந்தது. இதனால், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் அலுவலா்கள் குடிநீா் குழாய் இணைப்புகளை ஆய்வு செய்தபோது, உடைப்பு ஏற்பட்டிருந்த குடிநீா் குழாயில் சாக்கடை வழியாக வெளியேற்றப்பட்ட சாயக்கழிவு நீா் கலந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, குடிநீா்க் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு சரி செய்யப்பட்டு கழிவுகள் கலந்த தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...