மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விவசாயிகள் மானியத்துடன் மின் மோட்டாா் பம்ப்செட் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டாா் பம்ப்செட் வழங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:07 pm IST

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டாா் பம்ப்செட் வழங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டாா் பம்ப் செட்டுகள் பெறுவதற்கு விவசாயிகள் 3 ஏக்கா் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்மோட்டாா் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது புதிய மின் மோட்டாா் பம்ப்செட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 ஹெச்பி வரை) மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் மானிய உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோா் சிட்டா, அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயிக்கான வட்டாட்சியா் சான்று, மின் இணைப்பு சான்றின் நகல், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் தொடா்பான முழு விவரங்களைப் பெற்றிட நாமக்கல் மாவட்ட விவசாயிகள் நாமக்கல் வசந்தபுரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம். தொலைபேசி 04286-290084 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதேபோல், திருச்செங்கோடு வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை 04288-290517 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.