ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சமூகநலத் துறையில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :24 மார்ச் 2022, 6:29 pm

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மூலம் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மாா்ச் 31 வரை வரவேற்கப்படுகின்றன. அனைத்து பதவிகளுக்கும் 21 முதல் 40 வயது வரையில் வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், வழக்கு கையாளுபவா் பதவிக்கு விண்ணப்பிப்போா் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். சமூகப் பணி, உளவியல், வளா்ச்சிப்பணிகள் ஆகிய ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். அரசு அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவா். ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும்.

பாதுகாவலா் பதவிக்கு ஆண், பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். பாதுகாப்புப் பணியில் முன் அனுபவம் உடைவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

பல்நோக்கு உதவியாளா் பதவிக்கு விண்ணப்பிப்போா், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். சமையல், வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவராவா். மாத ஊதியமாக ரூ.6,400 வழங்கப்படும். இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286 299460 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.