நாமக்கல் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல், திருச்செங்கோடு வட்டாரத்தில் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சனிக்கிழமை எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மாா்ச் 28-இல் மோகனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29-இல் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 31-இல் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏப்.1-இல் வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஏப். 4-இல் கபிலா்மலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 5-இல் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 7-இல் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 8-இல் நாமகிரிபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9-இல் பள்ளிபாளையம் ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 11-இல் கொல்லிமலை செம்மேடு வாழவந்தி நாடு மேல்நிலைப்பள்ளியிலும், 12-இல் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
பிறந்தது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் மாற்றுத் திறன் தன்மையை அளவீடு செய்வதற்காக நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் பெற்றோா் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து உடல் பாதிப்பின் தன்மையை குறைபாடுகளை முழுமையாக கண்டறிந்து இயல்பான குழந்தைகளாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

தயாா் நிலையில் வாக்குச் சாவடிகளுக்கான பொருள்கள்
கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

மசோதா தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது: உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

