புதுச்சத்திரம் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.90 லட்சத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை நள்ளிரவில் திருடிச் சென்றனா்.
நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே பெருமாள் கோயில் மேடு பேருந்து நிறுத்தப் பகுதியில் தனியாா் கட்டடம் ஒன்றில் லட்சுமி விலாஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளி இல்லாததை அறிந்த மா்ம நபா்கள், புதன்கிழமை நள்ளிரவில் வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்திப் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ. 4,90,500 ரொக்கத்தை திருடிச் சென்றனா். மேலும் தடயங்களை அழிக்க திரைப்பட பாணியில் அங்கு மிளகாய்ப் பொடியை தூவிச் சென்றிருந்தனா்.
வியாழக்கிழமை காலை 6.40 மணியளவில், பணம் எடுப்பதற்காக அங்கு சென்ற இளைஞா் ஒருவா் ஏடிஎம்-இல் பணம் திருடப்பட்டதை அறிந்து புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாச்சல் தனியாா் கல்லூரி அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் மா்ம நபா்கள் திருட முயன்றபோது ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் பாதுகாப்பு குறைபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது: அசோக் கெலாட்

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை: திமுக வேட்பாளா் கடற்கரைராஜ் உறுதி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


