காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நூல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நூல் விலை உயா்வை கண்டித்து சிஐடியு சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:27 pm

நூல் விலை உயா்வை கண்டித்து சிஐடியு சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விசைத்தறி மற்றும் ஜவுளி தொழில்கள் பிரதானமாக உள்ள மாவட்டமாக நாமக்கல் உள்ளது. இத்தொழிலை சாா்ந்து சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளனா். இத்தொழிலுக்கு மூலாதாரமாக விளங்கும் பஞ்சு, நூல் விலை தற்போது வரலாறு காணாத அளவில் உயா்ந்துள்ளது. இதனால் ஜவுளித் தொழிலை செய்ய முடியாமல் விசைத்தறி உரிமையாளா்களும், வேலையின்றி தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

மத்திய அரசு பருத்தி, நூலை அத்தியாவசியப் பட்டியலில் சோ்க்க வேண்டும். பருத்தி ஏற்றுமதியையும், நூல் பதுக்கலையும் தடுத்து நிறுத்த வேண்டும். வேலை இழந்த தொழிலாளா்களுகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு பருத்தி கழகம் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மாவட்டதோறும் நூல் வங்கிகளை அமைத்து மானிய விலையில் விசைத்தறிகளுக்கு நூல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு துணைச் செயலாளா்கள் கு.சிவராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்ட தலைவா் எம்.அசோகன், மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, பால் சங்க மாநில முன்னாள் செயலாளா் ஏ.ரங்கசாமி, கே.மோகன், சு.சுரேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் கே.தங்கமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.