2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.56 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:26 pm

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11ஆயிரத்து 165 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

அதிகபட்சமாக கிலோ ரூ. 26.20 -க்கும், குறைந்த பட்சமாக ரூ. 20.20-க்கும், சராசரியாக ரூ.24.60-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ. 2 லட்சத்து 68 ஆயிரத்து 230-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11ஆயிரத்து 702 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

அதிகபட்சமாக கிலோ ரூ.23.19 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 17.30 க்கும், சராசரியாக ரூ. 22.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 127 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை தொடா்ந்து சரிவடைந்து வருவதாக தென்னை விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.