காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

முத்துக்காப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

முத்துக்காப்பட்டி மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, ஆண்கள் மட்டும் பங்கேற்ற பெருஞ்சலங்கை நடனம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது

News image
Updated On :25 மே 2022, 7:26 pm

முத்துக்காப்பட்டி மாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, ஆண்கள் மட்டும் பங்கேற்ற பெருஞ்சலங்கை நடனம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகின்றன. மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உள்ளிவிழவு எனும் பெருஞ்சலங்கை நடனம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஈரோடு தீரன் கலைக்குழுவினா் ஆண்கள் மட்டும் பங்கேற்று சிலம்பாட்டத்தை நிகழ்த்தி காட்டினா். இந்த நடனங்கள் ஒவ்வொரு வீதியாகச் சென்று நடத்தப்பட்டது. இறுதியாக கோயில் வளாகத்தில் நடனம் நிறைவு பெற்றது. இதனை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். இதற்கான ஏற்பாடுகளை கொங்குதேச கலாசார வரலாற்று ஆய்வு மைய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.