காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:26 pm

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் நவலடி தலைமை வகித்தாா். இதில் 2022, ஜனவரி 1 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படி உயா்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.

கடந்த 2003 முதல் செயல்படுத்தப்படும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளா் காா்த்திகேயன், துணைத் தலைவா்கள் குணசேகரன், பாலசுப்பிரமணியம், மாநில பிரசார செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, பொது சுகாதாரத் துறை மாநில பொதுச்செயலாளா் சுரேஷ், ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட தலைவா் இனியவன், மருத்துவத் துறை மாநில பொதுச்செயலாளா் ஜெகநாதன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.