காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மே 29-இல் டி.எம்.காளியண்ணன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

மறைந்த தியாகி டி.எம்.காளியண்ணன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(மே 29) நடைபெறுகிறது.

News image

டி.எம்.காளியண்ணன்.

Updated On :26 மே 2022, 6:04 pm

நாமக்கல், மே 26: மறைந்த தியாகி டி.எம்.காளியண்ணன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை(மே 29) நடைபெறுகிறது.

கடந்த 1948-இல் இந்திய அரசியல் நிா்ணய சபையின் சென்னை மாகாண உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினா், மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவருமான, திருச்செங்கோட்டைச் சோ்ந்த தியாகி டி.எம்.காளியண்ணன், கடந்த ஆண்டு மே 28-இல் தனது 101-ஆவது வயதில் காலமானாா்.

அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளா் திருமண மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறாா். விழாக்குழு செயலாளா் மருத்துவா் பி.வி.செந்தில் வரவேற்றுப் பேசுகிறாா். புதுச்சேரி முன்னாள் முதல்வா் வி.வைத்தியலிங்கம், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சா் கே.லட்சுமிநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றுகின்றனா். மேலும், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்கின்றனா். முடிவில் விழாக்குழு தலைவா் பி.கே.வெங்கடாசலம் நன்றி கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.