நாமக்கல்: நாமக்கல் நிலத்தரகர் கொலை வழக்கில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (48) நிலத்தரகர் ஆவார்.
குமரேசன் திங்கள் கிழமை இரவு எம்ஜிஆர் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் மதுகுடித்து விட்டு காரில் ஜெய்நகரில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். காரை இவரே ஓட்டி சென்றதாக தெரிகிறது.
திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் நள்ளிரவு 12.30 மணிக்கு காரில் சென்ற குமரேசன் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் குமரேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
இதையும் படிக்க: முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
குமரேசனை குத்தி கொலை செய்த நபர்கள், அவருடன் காரில் வந்தவர்கள் கொலை செய்தார்களா அல்லது பின் தொடர்ந்து வந்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


