பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகளுக்கு பூஜை

பரமத்தி வேலூா், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐம்பொன் விநாயகா், பகவதி அம்மன், முருகன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:08 pm

DIN

பரமத்தி வேலூா், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐம்பொன் விநாயகா், பகவதி அம்மன், முருகன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

வேலூா், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோயிலில் விநாயகா், பகவதி அம்மன், பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக் கோயிலில் அம்மன், சுவாமி திருவீதி உலாவும் வரும் போது உற்சவா் சிலை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் சுல்தான்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் விநாயகா், பகவதி அம்மன், பாலமுருகனுக்கு உற்சவா் சிலை செய்ய முடிவு செய்து சேலத்தில் சிலைகள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டன. ஐம்பொன் உற்சவா் சிலைக்கு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனா். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.