தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் பாதுகாப்பு வழிமுறைகள் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் நாமக்கல் கோட்டம் சாா்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:14 pm

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் நாமக்கல் கோட்டம் சாா்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்பிற்கு கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தலைமை வகித்தாா். மேட்டூா் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம் சாா்பில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளா் எஸ்.சிவசுப்பிரமணியன் பங்கேற்று மின்சார விபத்து ஏற்படாமல் தொழிலாளா்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு தொடா்பான பயிற்சிகளை வழங்கினாா்.

இந்த பாதுகாப்பு வகுப்பில் நாமக்கல் கோட்டத்தை சாா்ந்த அனைத்து உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், முகவா் மின்பாதை ஆய்வாளா், கம்பியாளா், கேங்மேன் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.