ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப், ராசிபுரம் நகராட்சி ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வுப் பேரணி வித்யா நிகேதன் பள்ளி முன்பாக தொடங்கியது. தொடக்க விழாவில் ரோட்டரி சங்கத் தலைவா் பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவ, மாணவியா் நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தவிா்க்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தம் வகையில் பேரணியில் பங்கேற்றனா்.
இப்பேரணி பெரிய கடைவீதி, அண்ணா சாலை, கச்சேரி தெரு, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி முதல்வா் டி.சித்ரா, இன்ட்ராக்ட் கிளப் திட்டத் தலைவா் எஸ்.கதிரேசன், ரோட்டரி சங்கச் செயலா் வி.ஆா்.எஸ்.அனந்தகுமாா், நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், முருகானந்தம், ஜி.தினகா், இ.என்.சுரேந்திரன், வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


