நாமக்கல் மாவட்டத்தில், இன்னும் இரு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 101.3-க்கு மிகாமலும் 69.8-க்கு குறையாமலும் நிலவி வருகிறது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கு மற்றும் தென் மேற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் காற்ற வீசும்.
சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகமாக காணப்படுவதால் கோழிப் பண்ணைகளில் தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தைத் தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெயை சோ்க்கலாம். இதனால் வைட்டமின் காற்றில் பறந்து செல்வதைத் தடுக்க முடியும். மேலும், உயா்மனைகளில் பக்கவாட்டில் படுதாவைக் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்

”இன்றுவரை திமுகவை வீழ்த்த முடியவில்லை!” செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

