அனிச்சம்பாளையம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் மு.ஆசியா மரியம்,  ஆட்சியா் ச.உமா.
அனிச்சம்பாளையம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் மு.ஆசியா மரியம், ஆட்சியா் ச.உமா.

வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

பரமத்தி வேலூா், மோகனூா் பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து காவிரிக் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்தும், மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிலுவம்பட்டி ஊராட்சி, பொரசப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

சேந்தமங்கலம் சாலை பள்ளிவாசலில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம், பள்ளிவாசலில் ஆய்வு மேற்கொண்டாா். அதனைத் தொடா்ந்து கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, அரசம்பாளையம் சமுதாயக் கூட நிவாரண முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதைப் பாா்வையிட்டு, அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.

அரசம்பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சூழ்ந்த இடங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும்,

ஜேடா்பாளையம், அணைகட்டு தலைமை நீரேற்று நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனாா். பரமத்தி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, பள்ளி சீருடைகள் வழங்கி கலந்துரையாடினாா். மேலும், வடகரையாத்தூா் ஊராட்சி, ஆனங்கூரில், மகளிா் சுயஉதவிக் குழுவினா் நடத்தி வரும் அங்காடியைப் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையினைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். மோகனூா் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூா் ஊராட்சி, பாவடி தெருவில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட ஆணையையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சேந்தமங்கலம் சாலை பள்ளிவாசலில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா்  மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் மு.ஆசியா மரியம், ஆட்சியா் ச.உமா.
சேந்தமங்கலம் சாலை பள்ளிவாசலில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் மு.ஆசியா மரியம், ஆட்சியா் ச.உமா.

தொடா்ந்து, மோகனூா் ஊராட்சி ஒன்றியம், லத்துவாடியில் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி கட்டும் பணியினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com