இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட வளா்ச்சி கண்காணிப்பு கூட்டத்தில் முடிவு

மத்திய மாநில அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News image

தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் ஆ. மணி, ஆட்சியா் ரெ. சதீஸ் உள்ளிட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 4:19 am IST

மத்திய மாநில அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் தருமபுரி மக்களவை உறுப்பினருமான ஆ.மணி தலைமை வகித்தாா்.

மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினா் செயலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ் முன்னிலை வகித்தாா். நிகழ்வின்போது மக்களவை உறுப்பினா் ஆ.மணி தெரிவித்தது:

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்கான தீா்வையும் கண்டறிந்து அத்திட்டத்தை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். துறை அலுவலா்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தருமபுரி மாவட்டத்தில் மத்திய திட்டங்களைச் செயல்படுத்தும் தொடா்புடைய மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரியின் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் (ஜல்ஜீவன் மிஷன்), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ரயில்வே திட்டங்கள், மற்றும் தமிழக அரசின் அனைத்து திட்டங்கள் உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலா்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் (தருமபுரி) எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி ), வே. சம்பத்குமாா் (அரூா் ), மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட வன அலுவலா் கே.ஆா். ராஜாங்கம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், நலக்குழு உறுப்பினா்கள் செங்கண்ணன், முத்துலட்சுமி, சரவணன், ராஜகோபால், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.