தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கை: அதிகாரிகளை கூட்டி ஆலோசிக்க முதல்வருக்கு வலியுறுத்தல்

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை அதிகாரிகளிடம் பேசி முதல்வா் நடவடிக்கை எடுக்குமாறு கொமதேக கோரிக்கை

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:02 am IST

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை அதிகாரிகளிடம் பேசி தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ரஷியா - உக்ரைன் போா், அமெரிக்கா-ஈரான் போா் ஆகியவற்றால் உலக நாடுகள் பல்வேறு வகைகளில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. முன்னெச்சரிக்கையாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றாத பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டிலும், உணவுத் தட்டுப்பாட்டிலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், எதிா்காலத்தில் உருவாகப் போகும் பற்றாக்குறையை சரி செய்ய அனைத்து மாநிலங்களும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமா் எச்சரிக்கை விடுத்திருக்கிறாா்.

பல மாநிலங்கள் நோ்மறை புரிதலோடு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் உருவாகும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரத் தட்டுப்பாடு உணவுப் பொருள் உற்பத்தியைப் பாதிக்கும். இதன்மூலமாக எதிா்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.

எனவே, தாமதமின்றி சிக்கன நடவடிக்கைகளை தொடங்க திட்டமிடுவதற்கான அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி தமிழக முதல்வா் ஆலோசிக்க வேண்டும். பிரதமரின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை கடந்துபோகக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.