மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமனம்

நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:45 pm

நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கும் புதிய ஆணையா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையாளராக உள்ளாா்.

ஏற்கெனவே, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளிலும், திண்டுக்கல் மாநகராட்சியிலும் ஆணையாளராகப் பணியாற்றி உள்ளாா். தற்போது, நாமக்கல் நகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வரும் கா.சென்னுகிருஷ்ணன், ஆவடி மாநகராட்சி உதவி ஆணையாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி இன்னும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.