தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On :

நாமக்கல், ஆக. 7: நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, இதுவரை எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை இனிவரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தற்போது ஜூலை 1 முதல் செப். 30 வரையிலான காலாண்டுக்கு வழங்கப்பட இருக்கிறது. மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரா்களும், இம்மையத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தகுதியானவா்கள் ஆவா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொருத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது. மேலும், சம்பந்தப்பட்ட மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

தகுதியுடையவா்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.