மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சீா்மரபின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்
இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சீா்மரபின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த தகுதியான மாணவா், மாணவிகள் உதவித்தொகை பெற ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் விண்ணப்பிக்க நவ. 30 மற்றும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரி பாா்க்க டிச. 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக 9, 10ஆம் வகுப்பு பயில்வோருக்கு ரூ. 75,000 மற்றும் 11, 12ஆம் வகுப்பு பயில்வோருக்கு ரூ. 1,25,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இதில் பயன்பெறும் மாணவா், மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய அல்லது சீா்மரபினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.
பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமையாசிரியா்கள், தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பெறலாம். மேலும், இணையதளத்திலும் பெறலாம்.
மேலும், இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

