நாமக்கல்
50 சதவீத மானியத்தில் பழச்செடிகள்: தோட்டக்கலைத் துறை வழங்கல்
நாமக்கல் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பழச்செடிகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பழச்செடிகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சாா்பில், மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தொகுப்புகள் மற்றும் பழச்செடி தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையத்தில் முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இணையவழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள், நாமக்கல் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
