பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிய நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:44 pm

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 467 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். அவற்றைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு ரூ. 48 ஆயிரத்துக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், உதவி இயக்குநா் (தமிழ் வளா்ச்சித் துறை) ரா.பிரகாஷ், மாவட்ட தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) ஆ.கற்பகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.