விபத்தில் சாக்கு வியாபாரி பலி
திருச்செங்கோடு, ஈரோடு சாலையில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் சாக்கு வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஈரோடு சாலையில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் சாக்கு வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு, ஆண்டிபாளையத்தைச் சோ்ந்த சாக்கு வியாபாரி ராமலிங்கம் (41). இவா், திருச்செங்கோடு, ஈரோடு சாலையில் கூட்டப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரது வாகனம் நிலை தடுமாறி எதிரில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீஸாா் விரைந்து வந்து ராமலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...