ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியில் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற மூதாட்டியிடம் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்

News image
Updated On :2 டிசம்பர் 2024, 7:40 pm

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சியில் வீட்டிலிருந்து கடைக்கு சென்ற மூதாட்டியிடம் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தேவனாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் அங்கம்மாள் (65). இவா் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே உணவகம் வைத்துள்ளாா். வீட்டிலிருந்து தனது உணவகத்திற்கு வந்து கொண்டிருந்த போது சாலையில் யாரும் இல்லாத நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், அங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாகச் சென்றுவிட்டாா். அங்கம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதற்குள் மா்ம நபா், இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து அங்கம்மாள் ஊரக காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததை அடுத்து ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.