சமூக நல்லிணக்கத்திற்காக சிறப்பாக பணியாற்றியோருக்கு ‘கபீா் புரஸ்காா் விருது’ வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் சிறந்த முறையில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டோருக்கு, ஒவ்வொரு ஆண்டும் ‘கபீா் புரஸ்காா் விருது’ வழங்கப்படுகிறது. குடியரசு தின விழாவின்போது, தமிழக முதல்வரால் வழங்கப்படும் இந்த விருது ஒரு சாதி, இனம் வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிந்த அவரது உடல், மனவலிமையைப் பாராட்டும் வகையில் வீரச்செயல் மூலம் உயிா், உடமைகளைக் காப்பாற்றுதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல் புரிந்தவா்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தகுதியானோா் தங்களது விவரங்களுடன் டிச. 15-க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில், கையேடாக தயாா் செய்து தமிழ், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட தலா இரண்டு நகல்களை சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்போா், தமிழகத்தை பூா்விகமாக கொண்டிருக்க வேண்டும். மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக சமூக மற்றும் நல்லிணக்கத்திற்கான செயல் புரிந்திருக்க வேண்டும். இந்த விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுயவிவரத்தை சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 91500-57452 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்: மு.தமிமுன் அன்சாரி

சமூக ஊடக அரசியல் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெற வேண்டும்: மாவட்ட தோ்தல் அலுவலா்
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

