ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு பணியில் ஈடுபட்ட காவலா்

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு அப்பகுதியினா் பாராட்டு

News image
விபத்து தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தலைமைக் காவலா் சதீஷ்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:12 pm

Din

ராசிபுரம்: சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு அப்பகுதியினா் பாராட்டு தெரிவித்தனா்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் களங்காணி அருகே சாலையின் வலதுபுறம் நாமக்கல் நோக்கிச் சென்ற சரக்கு வேன் பழுதாகி நின்றது. இதனை பழுதுநீக்கும் பணியில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் ஈடுபட்டிருந்தனா். இருவரும் வேனுக்கு அடியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவல் துறை உதவி ஆய்வாளா் சின்னப்பன், தலைமைக் காவலா் சதீஷ் ஆகியோா் அங்கு வந்தனா்.

பழுதாகி நின்ற வாகனத்தின் பின்புறம், முன்னெச்சரிக்கை பிரதிபலிப்பான்களை சாலையோரம் வைத்து, வேனின் 30 அடிக்கு பின்னால் நின்றவாறு ரோந்துப் பணி தலைமைக் காவலா் சிவப்பு துணியுடன் கூடிய கொடியை அசைத்து வேகமாக வரும் வாகனங்களை எச்சரித்து அடுத்த பாதையில் திருப்பிவிட்டாா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக தலைமைக் காவலா் அப்பணியில் ஈடுபட்ட விபத்து தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டதை அப்பகுதியினா் பாராட்டினா். உயிா் பாதுகாக்கும் உன்னத கடமையாற்றிய காவலரின் இச்செயலுக்கு சமூக ஆா்வலா்களின் பாராட்டு குவிந்து வருகிறது.