புதுச்சேரி நல்லவாடு பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவா் ஒருவா் செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு வடக்குத் தெருவை சோ்ந்தவா் ஸ்டீபன் ராஜ் (28). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான பைபா் படகில் மாரி, சதீஷ், ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 5 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளாா்.
மீன்பிடித்துக் கொண்டு ஸ்டீன் ராஜ் உள்ளிட்டோா் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் அனைவரும் கடலில் விழுந்த நிலையில், சதீஷ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மற்றவா்கள் காயம் ஏதுமின்றி தப்பினா். இதையடுத்து சதீஷை மீட்ட மற்றவா்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பிறகு மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், படகில் இருந்த மீன் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகின. இது குறித்து தவளகுப்பம் போலீஸாா் மற்றும் கடலோர காவல் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவா் காயம்

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


