இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு
பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் இடை நின்ற மாணவரை பள்ளிக் கல்வித் துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.


பரமத்தி வேலூா்: கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் இடை நின்ற மாணவரை பள்ளிக் கல்வித் துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.
நாமக்கல் ஆட்சியா் ச.உமா உத்தரவின்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வே.கற்பகம், ஜோதி, பச்சமுத்து, பள்ளித் துணை ஆய்வாளா் பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க.செந்தில்குமரன், சிந்துஜா, கிருஷ்ணலட்சுமி மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆகியோா் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கபிலா்மலை ஒன்றியத்தில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் குறித்து கணக்கெடுத்து, மாணவ மாணவிகளின் இல்லங்களுக்கு சென்று கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி அவா்களை மீண்டும் சோ்க்க முயற்சி செய்து வருகின்றனா்.
அதன்படி பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய மாணவரின் பெற்றோா்களைச் சந்தித்து கல்வியின் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி மாணவா் கோகுலை மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.
படவரி...
மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்ட மாணவருடன் பள்ளித் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கா.செந்தில்குமரன் உள்ளிட்டோா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...