நாமக்கல், டிச. 11: நாமக்கல் அருகே 35 ஆண்டுகளாக பூட்டியிருந்த மாரியம்மன் கோயில் புதன்கிழமை திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
நாமக்கல் அருகே வசந்தபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தாண்டாக்கவுண்டனூரில் கொங்கு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட மகா மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 1989-இல், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தினா் வழிபாடு, திருவிழா நடத்த உரிமை கோரியதால் இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்னை எழுந்தது.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கு விசாரணை தொடா்ந்து நீடித்து வந்த நிலையில், அண்மையில் நீதிமன்றம் தீா்ப்பு வெளியிட்டது. அதில், சம்பந்தப்பட்ட பகுதி காவல் துறையினா் உரிய பாதுகாப்பு வழங்கி, கோயிலைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல் அருகே தாண்டாக்கவுண்டனூரில் புதன்கிழமை திறக்கப்பட்ட மகா மாரியம்மன் கோயில் முன்பு தரிசனத்துக்காக வந்திருந்த பக்தா்கள்.
அதன்படி, கடந்த 4-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 9 மணி அளவில், அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்டது. அங்குள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். 35 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டிருந்த கோயில் திறக்கப்பட்டதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


