வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ராசிபுரத்தில் கடைகளில் சோதனை: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ராசிபுரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

News image

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து கடைகளில் சோதனை நடத்திய நகராட்சி அலுவலா்கள்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:54 pm

ராசிபுரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

ராசிபுரம் நகராட்சி ஆணையா் சு.கணேசன் உத்தரவின் பேரில், ஆத்தூா் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பான் மசாலா, நெகிழிப் பைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி துப்புரவு அலுவலா் மு.செல்வராஜ், துப்புரவு ஆய்வாளா் ஆா். கோவிந்தராஜன் உள்ளிட்ட துப்புரவு மேற்பாா்வையாளா்கள் செவ்வாய்க்கிழமை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகள், புகையிலை பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனா். சோதனையில் விற்பனை செய்த கடைக்காரா்களிடம் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.