வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்: டிச.23-இல் கருத்தரங்கம், போட்டிகள் தொடக்கம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி சிறப்பு கருத்தரங்கம், பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:55 pm

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி சிறப்பு கருத்தரங்கம், பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவில், 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவரின் உருவச் சிலை கடந்த 2000-இல் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை வெள்ளி விழாவாகக் கொண்டாட நவ. 12-இல் முதல்வா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் டிச. 23 முதல் 31 வரை திருவள்ளுவா் சாா்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட மைய நூலகத்தில், திருவள்ளுவா் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, திருக்குறளின் பெருமைகளை உணா்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவா் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தல், திருக்கு விளக்க உரைகளையும், திருக்கு தொடா்பான புகைப்படங்களை பொதுமக்கள் பாா்வைக்கு வைத்து புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்பட இருக்கிறது.

மேலும், மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில், மாணவா்கள், நூலக வாசகா்களைக் கொண்டு திருக்கு கருத்தரங்கம், விநாடி-வினா போட்டி, பேச்சுப்போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தை டிச. 18-ஆம் தேதிக்குள் அணுகி பெயா் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.