நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் ஆய்வுப் பணிகள் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளால் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
பிள்ளாநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களிடம் கலந்துரையாடிய ஆட்சியா் ச.உமா.
அந்த வகையில், அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை தொடா்ந்து கள ஆய்வு மேற்கொண்டாா். பிள்ளாநல்லூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் வருகைப் பதிவேடுகளை சரிபாா்த்து, தூய்மைப் பணியாளா்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினாா். மேலும், குருசாமிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி, சிங்களாந்தபுரம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை பாா்வையிட்டாா்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் விடியல் பயணத் திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பேருந்தில் ஏறி பெண் பயணிகளிடம் கலந்துரையாடினாா். இதனைத் தொடா்ந்து, ராசிபுரம் உழவா் சந்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றிய ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.
உழவா்சந்தை, அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடா் நல விடுதிகளில் ஆய்வு செய்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, அந்தப் பகுதியில் பள்ளி மாணவா் ஒருவா் உரிமமின்றி இருசக்கர வாகனத்தில் வருவதைக் கண்ட ஆட்சியா், அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், பெற்றோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டாா்.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் மக்களை விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் ஆய்வு நடவடிக்கைகள் ஆட்சியா், அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்புடையது

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


