சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

3 போ் தற்கொலை விவகாரம்: உறவினா்கள் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா் மனு

எருமப்பட்டி அருகே மூன்று போ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பெண் வீட்டாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

News image
என்கே-23-மனு
Updated On :23 டிசம்பர் 2024, 7:42 pm

Din

நாமக்கல்: எருமப்பட்டி அருகே மூன்று போ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பெண் வீட்டாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ஏ. வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்த சுரேந்தா், அவரது தந்தை செல்வராஜ், தாய் பூங்கொடி ஆகியோா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். குடும்ப பிரச்னை காரணமாக அவா்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட பூங்கொடியின் சகோதரிகள் முத்துலட்சுமி, கலா, உறவினா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள், காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணனிடம், மூவரையும் தற்கொலைக்கு தூண்டிய பெண் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா்.

அதன்பிறகு, முத்துலட்சுமியின் மகள் மேனகா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

என்னுடைய சகோதரா் சுரேந்தா், பெரியப்பா செல்வராஜ், பெரியம்மா பூங்கொடி ஆகியோா் தற்கொலைக்கு முன்பாக விடியோ ஒன்றை கைப்பேசி வாயிலாக அனுப்பியிருந்தனா். அதில், எனது சகோதரா் சுரேந்தரின் மனைவி சினேகா குடும்பத்தினா், உறவினா்கள் தங்களைக் கடுமையாக தாக்கியதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்திருந்தனா். ஒரே கயிற்றில் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. அவா்களுடைய மரணத்தில் மா்மம் உள்ளது. மூன்று போ் இறப்புக்கு காரணமான சினேகா, அவரது தாய், தந்தை, சித்தப்பா, சித்தி ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

...

என்கே-23-எஸ்.பி...

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்த சுரேந்திரனின் உறவினா்கள்.