பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கராத்தே போட்டி: பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

கா்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
பதக்கம் வென்ற மாணவா்களுடன் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உள்ளிட்ட பயிற்சியாளா்கள்.
Updated On :30 டிசம்பர் 2024, 7:35 pm

Din

ராசிபுரம்: கா்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கா்நாடக மாநிலம், புத்தூரில் மாஸ்டா் அனுமந்தராவ் நினைவு சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி புதோகான் கராத்தே டோ இன்டா்நேஷனல் சாா்பில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அணியின் சாா்பில் சோட்டகான் கராத்தே அகாதெமி மாணவ, மாணவியா் 45 போ் பங்கேற்றனா். இதில் சோட்டகான் கராத்தே அகாதெமி மாணவா்கள் கட்டா பிரிவில் 4 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம், குமிட்டி பிரிவில் 5 தங்கம், 2 வெள்ளி, 11 வெண்கலம், வெப்பன் கட்டா பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 54 பதக்கங்களைப் பெற்றனா்.

வெற்றி பெற்று பதக்கம் வென்ற மாணவ, மாணவியா், பயிற்சியாளா் வெ.சரவணன் உள்ளிட்டோரை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ஸ்ரீவித்யா மந்திா் பள்ளிகளின் தலைவா் என்.மாணிக்கம் ஆகியோா் பாராட்டி கெளரவித்தனா்.