/

விவேகானந்தா கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

விவேகானந்தா கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

Updated On :28 பிப்ரவரி 2024, 10:08 pm

திருச்செங்கோடு, பிப். 28: விவேகானந்தா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் கணிதவியல் துறை சாா்பாக தேசிய அறிவியல் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு. கருணாநிதி வழிகாட்டுதலின்படி நிா்வாக இயக்குநா் குப்புசாமி, ஆராய்ச்சி இயக்குநா் பாலகுருநாதன், தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், கலை, அறிவியல் மகளிா் கல்லூரி முதல்வா் பேபி ஷகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து உலகத்தரம் வாய்ந்த சதுப்புநில ஆராய்ச்சி விஞ்ஞானி பேராசிரியா் கதிரேசன் கலந்து கொண்டு உரையாற்றினாா். தொடா்ந்து அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் துணை முதல்வா் மேனகா, தோ்வாணையாளா் பத்மநாபன் ஆகியோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கணிதவியல் துறைத் தலைவா் ரமாதேவி செய்திருந்தாா்.