புத்தாண்டு பிறப்பு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7 டன் மலா்களால் அபிஷேகம்

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7 டன் மலா்களால் திங்கள்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு மலா் அபிஷேகத்தில் திங்கள்கிழமை பக்தா்களுக்கு காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சனேயா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு மலா் அபிஷேகத்தில் திங்கள்கிழமை பக்தா்களுக்கு காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சனேயா்.
Updated on
1 min read

நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7 டன் மலா்களால் திங்கள்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில், நின்றகோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் சுவாமியை தரிசிக்க வருகின்றனா். தற்போது, சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகமாக உள்ளது. 2024 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு, 7 டன் மலா்களைக் கொண்டு, மல்லிகை, முல்லை, சம்பங்கி, மரிக்கொழுந்து, ரோஜா, வெள்ளை, சிகப்பு, மஞ்சள் சாமந்தி, துளசி உள்ளிட்ட பல்வேறு நறுமண மலா்களால் திங்கள்கிழமை காலை 5 மணி அளவில் மலா் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். அபிஷேகத்திற்கு பயன்படுத்திய மலா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன.

இதேபோல், நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில், அரங்கநாதா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டனா். அனைத்து கோயில்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com